அரசியல்

பல விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானின் வெற்றி

Published

on

பல விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஈரானின் வெற்றி

ஈரானின்(Iran) தாக்குதல் வெற்றியடைந்ததா? தோல்வியா?என்ற விவாதங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

ஈரானின் ஆளில்லா விமான மற்றும் ஏவுகணை தாக்குதலை தடுத்தமை இஸ்ரேலின்(Israel) வெற்றியாக மேற்குலகம் வர்ணித்தாலும் உண்மையில் இந்த தாக்குதல் ஈரான் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியை அந்நாட்டுக்கு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் ஈரானின் வெற்றியாக கருதப்படுவதற்கான காரணங்களை பல படைத்துறையினர் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் யாருமே தொட முடியாது என நினைத்த இஸ்ரேலை தாக்குவதற்கு முன்னரே அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்துவிட்டு இவ்வாறு தாக்குதல் நடத்துவது இதுவே முதல் தடவை.

இந்த படை நடவடிக்கைக்கு ”உண்மையான வாக்குறுதி” என்று ஈரான் பெயர் சூட்டியுள்ளதுடன் எந்தவொரு தாக்குதலுக்கும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தாமல் இருந்ததில்லை.

இந்த தடவை இஸ்ரேலின் வான் பரப்பை உடைத்து ஊடுருவி ஆளில்லா விமானம் மூலம் ஈரான் நேரடியாக தாக்கியுள்ளமை அதன் தொழில்நுட்ப ரீதியான வெற்றியை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

ஈரானின் ஐபோசொனிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால்(America) தடுக்க முடியவில்லை.

இதற்கமைய ரஷ்யாவின்(Russia) ஐபோசொனிக் ஏவுகணைகளை வீழ்த்தியதாக இதுவரைகாலமும் உக்ரைன்(Ukraine) கூறிய கதைகளையும் ஈரான் பொய்யாக்கியுள்ளது.

அதாவது ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேலை ஊடுருவும் போது ரஷ்ய ஏவுகணைகளை தடுப்பது அவ்வளவு எளிதான விடயமல்ல என்பது உறுதியாகியுள்ளது.

இஸ்ரேலை தாக்க ஈரான் தயாரான போது அது மூன்றாவது உலக போரை ஆரம்பிக்க விரும்பவில்லை. ஆனால் ஈரான் தனது தாக்குதலின் குறிக்கோளை மூன்று வழிகளில் எட்டியுள்ளது.

முதலாவது துணை இராணுவ குழுக்கள் மூலம் தாக்காது நேரடியாக இஸ்ரேலை தாக்கியுள்ளது.

பல ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும் அது இஸ்ரேலின் இரண்டாவது பெரிய வான் படை தளத்தை தாக்கியுள்ளது.

மூன்றாவதாக இஸ்ரேல் ஈரானை திருப்பி தாக்கவில்லை. எனவே இவ்வாறான பல காரணங்களின் அடிப்படையில் ஈரானின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version