உலகம்

2 நாடுகள் தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை

Published

on

2 நாடுகள் தொடர்பில் பிரித்தானியா பயண எச்சரிக்கை

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு இரண்டு நாடுகள் தொடர்பில் வெளியுறவு அலுவலகம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தொடர்பில் பிரித்தானியர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய வெளியுறவு அலுவலகம்.

சமீப காலமாக எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் பிரித்தானியர்களின் விருப்ப சுற்றுலாத்தலங்களாகியுள்ளன. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளுக்கும் செல்வது தொடர்பில் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எகிப்து, இஸ்ரேல் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அத்துடன், பிரித்தானியர்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், கடத்தப்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, எகிப்துக்கு சுற்றுலா செல்வது ஆபத்தானது என்றும் சுற்றுலா செல்வோர் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டுமென்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மொராக்கோவைப் பொருத்தவரை, தீவிரவாதிகள் மொராக்கோ மீது தாக்குதல் நடத்தக்கூடும். மொராக்கோவில் வாழ்வோரிடையே ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. ஆகவே, பிரித்தானியர்கள் கடத்தப்படும் அபாயம் உள்ளது.

சமீபத்திய இஸ்ரேல் ஈரான் தாக்குதல்களின்போது எகிப்து மீதோ, மொராக்கோ மீதோ தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. என்றாலும், சூழல் வேகமாக மாறிவருகிறது. ஆகவே, ஆக, இந்த இரண்டு நாடுகளுக்கும் சுற்றுலா செல்வோர் கவனமாக செயல்படவேண்டும் என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் பிரித்தானியர்களை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version