உலகம்

ஈரான் இஸ்ரேல் போரை நான் முன்கூட்டியே துல்லியமாக கணித்தேன்: வாழும் நாஸ்ட்ரடாமஸ்

Published

on

ஈரான் இஸ்ரேல் போரை நான் முன்கூட்டியே துல்லியமாக கணித்தேன்: வாழும் நாஸ்ட்ரடாமஸ்

ஈரான் இஸ்ரேல் போரை நான் முன்கூட்டியே துல்லியமாக கணித்தேன். ஆகவே, என்னை விமர்சிப்பவர்கள், நான் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஜோதிடக்கலை நிபுணர் ஒருவர்.

எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள், பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு சிறுநீரக மற்றும் இனப்பெருக்க அமைப்பில் பிரச்சினைகள் என பல விடயங்களை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé). ஆனால், அவர் மீது இன்னமும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

இந்நிலையில், ஈரான் இஸ்ரேல் போரை நான் முன்கூட்டியே துல்லியமாக கணித்தேன், அதனால், என்னை விமர்சிப்பவர்கள் என்னை வாழும் நாஸ்ட்ரடாமஸ் என ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஏதோஸ்.

2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 23ஆம் திகதியே, ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமிடையே முரண்பாடு முற்றும் என கணித்திருந்தார் ஏதோஸ்.

அவர் கூறியதைப் போலவே, 2024ஆம் ஆண்டு, அதாவது, இந்த ஆண்டு, ஏப்ரல் 1ஆம் திகதி, சிரியாவிலுள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த, பதிலுக்கு, ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான்.

Exit mobile version