உலகம்

விமானக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள ஈரான்

Published

on

விமானக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள ஈரான்

ஈரானிய(Iran) விமான நிலையங்கள் விமானக் கட்டுப்பாடுகளை நீக்கி வழக்கமான செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் பதிலடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் விமான செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நாட்டின் மேற்குப் பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட மண்டலமாக நிறுவியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை ஈரான் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

ஈரானின் விமானப் பாதைகள் திறந்திருப்பதாகவும், விமானங்களுக்கு எந்த தடையும் இல்லை எனவும் நிறுவனம் அந்த குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முடித்த ஒரு நாளுக்குப் பிறகு தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் திங்கட்கிழமை அதிகாலை விமான நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்துள்ளது.

Exit mobile version