உலகம்

14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டெஸ்லா!

Published

on

14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டெஸ்லா!

தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள எலான் மஸ்க்கிற்கு(Elon Musk) சொந்தமான டெஸ்லா எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில்(Tesla Motors) பணிபுரியும் குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீர்மானத்தினை தயக்கத்துடன் முடிவு செய்ததாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் வரை, சந்தை மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்தில் 140,473 ஊழியர்கள் பணியாற்றினர்.

அதன்படி, இவர்களில் 10% ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version