உலகம்

கனடாவில் அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்

Published

on

கனடாவில் அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்

கனடாவில் அதிகளவிலான போதைப்பொருள் பாவனையால் இளம் வயதினர் உயிரிழந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

அளவுக்கு அதிகமான போதை மருந்து பயன்பாட்டினால் 20 மற்றும் 30 வயதுகளை உடையவர்கள் அதிகம் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்கு தேவையான கொள்கை வகுப்புக்களில் ஆர்வம் காட்டப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மிதமிஞ்சிய அளவிலான போதை மருந்து பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய இள வயது மரணங்களை தடுக்க மாகாண அரசாங்கங்களும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரட்டிஷ் கொலம்பியா, ஒன்றாரியோ, குபெக், நியூ பிரவுண்ஸ்விக் மற்றும் நோவா ஸ்கோஷியா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version