இந்தியா

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியாவில் மாலத்தீவு ரோடு ஷோ

Published

on

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியாவில் மாலத்தீவு ரோடு ஷோ

இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பற்றாக்குறையை சந்தித்து வரும் மாலத்தீவு, தற்போது இந்தியர்களை கவரும் வகையில் இந்தியாவில் ரோடு ஷோ நடத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் மாலத்தீவு சுற்றுலா சங்கம் கூட்டம் நடத்தியது.

இந்திய நகரங்களில் ரோட் ஷோ நடத்தி, அதன் மூலம் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களை (Social Media Influencers) பயன்படுத்தி மாலத்தீவுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்சியை மாலத்தீவு தொடங்கியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மற்றும் சீனாவின் ஆதரவாளரான முகமது முய்சு (Mohamed Muizzu) மாலத்தீவில் ஜனாதிபதியான பிறகு, அங்குள்ள இந்தியப் படைகளை வெளியேறுமாறு உத்தரவிட்டார்.

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய சுற்றுலாவாசிகளை லட்சத்தீவுக்கு செல்ல அழைப்பு விடுத்ததை அடுத்து, மாலத்தீவு அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தார்.

இதன்பின், மாலத்தீவுக்கு வருகை தந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா, ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

71,995 சுற்றுலாப் பயணிகளுடன் மாலத்தீவுக்குச் செல்வோர் பட்டியலில் சீனா தற்போது முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து பிரித்தானியா (66,999), ரஷ்யா (66,803), இத்தாலி (61,379), ஜேர்மனி (52,256) உள்ளன. 37,417 சுற்றுலா பயணிகளுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

Exit mobile version