உலகம்

உலகப்போர் மூளும் அபாயம்! கூடவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை

Published

on

உலகப்போர் மூளும் அபாயம்! கூடவுள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் ஈரானால் தாக்கப்பட்ட நிலையில், ​​இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் அவசரகால நிலையை அறிவித்து வான்வெளியை மூட முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேலின் நண்பரான அமெரிக்கா, ‘ஒதுங்கி நிற்க வேண்டும்’ என, ஈரான் அமெரிக்காவுக்கும் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியும் தொலைபேசியூடாக பேச்சு நடத்தியுள்ளார்.

ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், உலகப்போர் மூளும் அபாயம் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version