உலகம்

ஐ.எம்.எப் பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

Published

on

ஐ.எம்.எப் பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா

2024ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று (12) இடம்பெற்ற செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, இந்த ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் ஐந்தாண்டு காலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரே வேட்பாளர் இவர் என்பதோடு இந்த நியமனத்தை வழங்குவதற்கு முன்னர் ஜோர்ஜீவாவுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஜோர்ஜீவா, 2019 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து வந்துள்ள நிலையில் இதற்கு முன் 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் உலக வங்கியின் (World Bank) தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

Exit mobile version