உலகம்

கனடாவில் ஐ-போன் பாவனையாளர்களுக்கு அறிவிப்பு

Published

on

கனடாவில் ஐ-போன் பாவனையாளர்களுக்கு அறிவிப்பு

கனடாவில் (Canada) ஐ-போன் (iphone) பயன்படுத்துபவர்கள் நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 6 (iphone 6) மற்றும் ஐ-போன் 7 (iphone 7) ஆகியவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் நட்டஈடு பெற முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீர்ப்பானது பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து 14.4 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது,2023ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் திகதி அல்லது அதற்கு முன்னர் கனேடிய பிரஜைகளாக இருப்பவர்கள் இந்த நட்டஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை அப்பிள் நிறுவனம் மறுத்து வருகின்றது. இதேவிதமான மற்றுமொரு வழக்கு குபெக்கிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version