உலகம்

ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண்

Published

on

ஈபிள் கோபுரத்தில் ஏறி சாதனை படைத்த இளம் பெண்

பிரான்ஸ் நாட்டிலுள்ள தடகள வீராங்கனை ஒருவர் தன் தாய்க்காக பாரிஸிலுள்ள ஈபிள் கோபுரத்தில் கயிறு மூலம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அனுக் கார்னியர்(Anouk Garnier) என்னும் 34 வயதுடைய தடகள வீராங்கனை ஒருவரே சாதனை படைத்துள்ளார்.

குறித்த வீராங்கனை கயிறு மூலம் ஈபிள் கோபுரத்தில் 361 அடி, அதாவது 110 மீற்றரை 18 நிமிடங்களில் ஏறி முடித்துள்ளார்.

இதற்கு முன், கயிறு மூலம் உயரமான ஒரு கட்டிடத்தில் ஏறிய பெண் என்னும் சாதனையை ஐடா மாடில்டே ஸ்டீன்ஸ்கார்ட் (Ida Mathilde Steensgaard) என்னும் நெதர்லாந்து பெண் படைத்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு அவர் கோபன்ஹேகன் (Copenhagen) ஓபரா இல்லத்தில் 85 அடி, 26 மீற்றர் உயரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது, ஈபிள் கோபுரத்தில் 361 அடி, அதாவது 110 மீற்றர் உயரத்துக்கு கயிறு மூலம் ஏறி அனுக் கார்னியர்(Anouk Garnier) அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் தடகள வீராங்கனையான அனுக் கார்னியர்(Anouk Garnier) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்க்காகவும், புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆதரவுக்காகவும் இந்த சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version