உலகம்
இந்த ஐந்து நாடுகளில் விமான நிலையம் இல்லை., ஏன் தெரியுமா?
இந்த ஐந்து நாடுகளில் விமான நிலையம் இல்லை., ஏன் தெரியுமா?
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க நாம் கண்டிப்பாக விமானங்களை நாட வேண்டும்.
சாலை மற்றும் நீர்வழிகள் மூலம் பயணம் செய்ய வசதியாக இருந்தாலும், போக்குவரத்தில் அதிக நேரம் வீணடிக்கப்படுகிறது.
எனவே விமானப் பயணம் அனைவருக்கும் முதல் தேர்வாகிறது. இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால் உலகில் இன்னும் ஐந்து நாடுகளில் மட்டும் விமானமோ, விமான நிலையமோ இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?
இப்போது கேட்பதற்கு வினோதமாகவும் அனைவரையும் வியக்க வைக்கலாம். ஆனால், இது உண்மைதான்.. இந்த நாடுகளில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. அந்த 5 நாடுகள் என்னென்ன?
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே அமைந்துள்ள இந்த நாடு மலைகளால் சூழப்பட்டுள்ளது, இது இங்கு பறப்பது ஆபத்தானது. அதனால்தான் அன்டோராவில் விமான நிலையம் இல்லை.
லிச்சென்ஸ்டைனில் விமான நிலைய வசதி இல்லை. இங்கிருந்து ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் அதற்கு அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் விமான நிலையத்திற்கு தான் செல்ல வேண்டும்.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி இடையே அமைந்துள்ள இந்த நாட்டில் விமான நிலையம் இல்லை. மொனாக்கோவின் மக்கள்தொகை மற்றும் பரப்பளவு இரண்டும் சிறியது, அதனால்தான் அதற்கு விமான நிலையம் இல்லை.
ஐரோப்பாவில் உள்ள உலகின் மிகச் சிறிய நாடான வாடிகன் நகரில் விமான நிலையம் இல்லை. இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 108.7 ஏக்கர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பழமையான நாடுகளில் ஒன்றான சான் மரினோவில் ஒரு விமான நிலையம் கூட இல்லை. இங்குள்ள மக்கள் இத்தாலியில் உள்ள ரிமினி விமான நிலையத்திற்கு சாலை வழியாக செல்கின்றனர்.