இலங்கை

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

Published

on

சிரியாவில் ஈரானிய தூதரகம் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகள் தொடர்பிலான வியன்ன பிரகடனம் பூரணமாக பின்பற்றப்பட வேண்டுமென இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வன்முறைகளை கைவிட வேண்டும் எனவும், ஏற்கனவே பிராந்திய வலயத்தில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.

ஈரானிய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதாக ஈரான், ரஸ்யா மற்றும் சிரியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.எனினும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் எவ்வித கருத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

Exit mobile version