உலகம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு

Published

on

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்துள்ள அமைப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், முதன்முறையாக, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க சர்வதேச தடகள அமைப்பு முடிவு செய்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு முறையே, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படுவதை அனைவரும் அறிவோம்.

ஆனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெருவோருக்கு பணம் எதையும் பரிசாக வழங்குவதில்லை.

தங்கள் நாட்டு வீரர் வெற்றி பெற்றதால், அதாவது, தங்கள் நாட்டுக்கு அவர்கள் பெருமை சேர்த்ததால், அந்தந்த நாடுகள் தங்கள் வீரர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குகின்றன. அந்த தொகை, நாட்டுக்கு நாடு மாறுபடும்.

இந்நிலையில், சர்வதேச தடகள அமைப்பு (World Athletics, the international athletics federation), முதன்முறையாக, ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ரொக்கப்பரிசு வழங்க முடிவுசெய்துள்ளது.

அவ்வகையில், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில், அதாவது, தடகளப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு, 50,000 டொலர்கள் ரொக்கப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள அமைப்பின் தலைவரான Sebastian Coe தெரிவித்துள்ளார்.

மேலும், Relay race போன்ற விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வெல்வோர், அந்த 50,000 டொலர்களை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.

அத்துடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது, வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வெல்வோருக்கும் ரொக்கப்பரிசு வழங்க திட்டமிட்டுவருகிறது, சர்வதேச தடகள அமைப்பு.

Exit mobile version