உலகம்

ராஜ குடும்பத்தினர் இந்த நான்கு உணவுகளை மட்டும் சாப்பிடவே மாட்டார்களாம்

Published

on

ராஜ குடும்பத்தினர் இந்த நான்கு உணவுகளை மட்டும் சாப்பிடவே மாட்டார்களாம்

உலகத்தில் எத்தனை வகை உணவுகள் உள்ளனவோ, அத்தனையையும் உண்ணும் வசதியும் வாய்ப்பும் ராஜ குடும்பத்தினருக்கு உள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆனால், சில குறிப்பிட்ட உணவுவகைகளை மட்டும் ராஜ குடும்பத்தினர் உண்ணுவதே இல்லையாம்.

வெங்காயம், பூண்டு
ஆம், ராஜ குடும்பத்தினருக்கு உனவு சமைக்கும்போது, அதில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்ப்பதில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் ராஜ குடும்ப சமையல் கலை நிபுணரான John Higgins என்பவர்.

முன்னொருமுறை அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த ராணி கமீலாவிடம் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் இந்த விடயம் குறித்து ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. எந்த உணவுகளை ராஜ குடும்பத்தினர் உண்ண தடை உள்ளது என்று கேட்டபோது, பூண்டு என்று கூறியுள்ளார் கமீலா. அதற்குக் காரணம், ராஜ குடும்பத்தினர் விருந்தினர்களுடன் பேசிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளதால், அதன் வாசனை வீசவோ அல்லது ஏப்பம் வந்துவிடவோ கூடாது என்பதால் பூண்டைத் தவிர்ப்பதாக கூறியுள்ளார் அவர்.

கடல் உணவுகள்
அதேபோல, ராஜ குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, கடல் உணவுகள், குறிப்பாக, shellfish என்னும் சிப்பிவகை உணவுகள், இறால் போன்றவற்றை தவிர்த்துவிடுவார்களாம்.

அதற்குக் காரணம், இந்த சிப்பி வகை உணவுகள் food poisoning என்னும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடும். வெளிநாட்டுக்கு அரசு முறைப்பயணமாக சென்றிருந்த நேரத்தில் food poisoning பிரச்சினையால் பாதிக்கப்பட்டால் என்ன ஆவது? அதனால்தான் ராஜ குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது இவ்வகை கடல் உணவுகளை தவிர்த்துவிடுவார்கள் என்கிறார் மற்றொரு சமையல் கலை நிபுணரான Grant Harrold.

Foie Gras
Foie gras என்பது, வாத்துக்களுக்கு, குழாய் மூலம் அதிக அளவு மக்காச்சோளத்தை உணவாக கொடுத்து, (அல்லது வலுக்கட்டாயமாக திணித்து என்றும் சொல்லலாம்) வாத்துக்களின் ஈரலை சீக்கிரமாக கொழுக்கச் செய்து, அந்த ஈரலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவாகும்.

ஆகவே, ராஜ குடும்ப விருந்துகளில் இந்த உணவை பரிமாற மன்னர் சார்லஸ் தடை வித்துள்ளார். அதற்காக விலங்குகள் நல அமைப்பான PETA, மன்னரைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version