உலகம்

கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ள நாடு

Published

on

கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ள நாடு

புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடுமையான விசா விதிகளை அவுஸ்திரேலியா, கனடா நாடுகளை தொடர்ந்து நியூசிலாந்தும் அறிவித்துள்ளது.

அதில் முதற்கட்டமாக நியூசிலாந்து நாட்டில் வேலைகளுக்கு தகுதி பெறுவதற்கான தேவைகளை அதிகரித்து, குடியேறியவர்களின் எண்ணிக்கையை சரிபார்க்க கடுமையான விசா விதிகளை அறிவித்துள்ளது.

இதனால் நியூசிலாந்தில் வேலை தேடும் ஆசிய நாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

புதிய தேவைகளில் ஆங்கிலப் புலமை, பணி அனுபவம் மற்றும் திறன் அளவுகோல்கள், பணி அனுமதிப்பத்திரத்துடன் தங்கியிருக்கும் கால அளவைக் குறைப்பது ஆகியவை அடங்கும்.

குடியேற்ற முறையை மாற்றியமைப்பதன் மூலம், நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் “பொருத்தமற்ற” எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இந்த முடிவால் இந்தியர்கள் மற்றும் பிற குடியேறியவர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. நியூசிலாந்தில் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2018 நியூசிலாந்து மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியர்கள் மக்கள் தொகையில் 4.7 சதவிகிதமாக உள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றது.

ஒக்டோபர் 2023ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், நியூசிலாந்தில் சுமார் 2,50,000 இந்திய வம்சாவளியினர் மற்றும் குடியேறியவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 முதல் சுமார் 18,000 இந்தியர்கள் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். புதிய விசா விதிகள் குடியேற்றத்தைக் கட்டுபடுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குவதையும், அவர்களை நாட்டில் தங்குவதற்கு ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ல் மட்டும், சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக வேறு நாடுகளுக்கு 47,000 நியூசிலாந்து குடிமக்கள் குடிபெயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version