உலகம்
சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில காட்சிகள்
சூரிய கிரகணத்தால் இருளில் முழ்கிய நாடுகள்: சில காட்சிகள்
அறிவியல் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்த நிலையில், உலகின் சில பகுதிகள் இருளில் மூழ்கியது முதலான அபூர்வ காட்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
உச்சி வெயில் உச்சந்தலையைப் பதம் பார்க்கவேண்டிய நேரத்தில், முழு சூரிய கிரகணம் காரணமாக, வட அமெரிக்கா சில நிமிடங்கள் இருளில் மூழ்கியது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை சந்திரன் சூரியனை 4 நிமிடங்கள் 28 விநாடிகளுக்கு மறைத்தது.
வானம் தெளிவாக இருந்த இடங்களில் சூரிய கிரகணத்தைக் காண ஆவலுடன் கூடியிருந்த மக்கள், திடீரென இருள் சூழ, ஆச்சரியத்தில் திளைத்தார்கள்.
வானத்தில் இருள் சூழ, இரவு நேரத்தில் தோன்றுவதுபோல் ஆங்காங்கே நட்சத்திரங்கள் மின்னத் துவங்க, என்ன திடீரென இரவாகிவிட்டதே என பறவைகளும் விலங்குகளும் அமைதியாக, சிறிது நேரத்தில் மீண்டும் திடீரென ஒளி தோன்ற, மக்கள் உற்சாகக் குரல் எழுப்ப, இசைக்குழு ஒன்று ‘Man on the Moon’ என்னும் பாடலை இசைக்கத் துவங்கியது.
தங்கள் வாழ்நாளில் இபப்டி ஒரு அரிய நிகழ்வைக் காணும் பாக்கியம் கிடைத்ததைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார்கள் ஒரு கூட்டத்தினர்.