உலகம்
நல்லதையும் சொல்லியிருக்கும் பாபா வங்கா: நிறைவேறிய கணிப்பு
நல்லதையும் சொல்லியிருக்கும் பாபா வங்கா: நிறைவேறிய கணிப்பு
பொதுவாகவே, எதிர்காலத்தைக் கணிப்பவர்கள் என அறியப்படும் நிபுணர்கள் பலர், உலகில் நிகழவிருக்கும் மோசமான விடயங்களையே கணித்துள்ளதுபோல ஒரு தோற்றம் காணப்படுகிறது.
ஆனால், உண்மையில் அப்படி இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள், போர், கொள்ளை நோய், பிரபலங்களின் மரணம் என மோசமான விடயங்கள் மட்டுமின்றி, சிலர் சில நல்ல விடயங்களையும் கணித்திருக்கிறார்கள். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர்.
ஆம், 9/11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், பிரெக்சிட் போன்ற விடயங்களைக் கணித்த பாபா, உலகம் இந்த ஆண்டில் மிகப்பெரிய மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைச் செய்யும் என கணித்துள்ளார்.
அவற்றில் ஒன்று கிட்டத்தட்ட நிறைவேறியே விட்டது. பாபா கூறியதைப்போலவே, அறிவியலாளர்கள் சிலர், நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து ஒன்றைத் தயாரித்துவருவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலை, Francis Crick நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் சிலர் இணைந்து, நுரையீரல் புற்றுநோய்க்கெதிரான LungVax என்னும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.
அத்துடன், ரஷ்ய அறிவியலாளர்களும் இதேபோன்றதொரு ஆய்வு மேற்கொண்டுவருவதை, ரஷ்ய ஜனாதிபதி புடினே கூறியுள்ளார்.
ஆக மொத்தத்தில் பாபாவின் கணிப்புகளில் ஒன்று துல்லியமாக நிறைவேறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.