உலகம்

கனேடிய அரசு சர்வதேச மாணவர்களுக்கு அறிவிப்பு

Published

on

கனேடிய அரசு சர்வதேச மாணவர்களுக்கு அறிவிப்பு

2024 ஆம் ஆண்டில், சர்வதேச மாணவர்களுக்கான (International Students) கல்வி அனுமதிகளின் (study permits) எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என கனேடிய(Canada) அரசு அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தினை அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஆண்டு காலாவதியாகும் கல்வி அனுமதிகளுக்கு இணையாக புதிய கல்வி அனுமதி வழங்கும் கொள்கையை தேர்வு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் கனடாவினால் வழங்கப்படும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை 3.64 இலட்சமாக காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆரம்ப மற்றும் இடைநிலை மாணவர்கள், முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் இந்தக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது.

Exit mobile version