உலகம்

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட்

Published

on

சீனாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய மைக்ரோசொப்ட்

உலகம் முழுவதும் இந்தியா உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கபடுகின்ற நிலையில் சீனா தேர்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு, பிரதானமாக இந்தியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் நடைபெற உள்ள தேர்தல்களில் இடையூறு ஏற்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், மைக்ரோசொப்டின் அச்சுறுத்தலை கண்டறிவதற்கான நுண்ணறிவு குழு கூறும் தகவலின்படி, சீனாவின் சைபர் குழுக்கள், வடகொரியா தொடர்புடன், 2024ஆம் ஆண்டு நடைபெறும் பல்வேறு தேர்தல்களை இலக்காக கொண்டு செயற்படக் கூடும் என தெரியவந்துள்ளது.

அதன்போது, சீனாவானது, தங்களுக்கு சாதகம் ஏற்படும் வகையில், பொது மக்களின் கருத்துகளை மெல்ல சமூக ஊடகம் வழியே பரப்பி விடுவதற்காக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட செய்திகளை அள்ளி குவிக்குமென்று மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது.

அத்துடன், சீனாவின் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நாடுகள் உலக மக்கள் தொகையில் கூட்டாக 49 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version