உலகம்

போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் தீர்மானம்

Published

on

போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் தீர்மானம்

காசா பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேலை பொறுப்பேற்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இது திரிபுபடுத்தப்பட்ட அறிக்கை என்று கூறி இஸ்ரேல் அந்த பிரேரணையை நிராகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 28 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட 6 நாடுகள் தமது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து சபையின் பல பிரதிநிதிகள் கரகோஷம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காசா பகுதியில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான தாக்குதல்கள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து கவுன்சில் கவனம் செலுத்தி, இஸ்ரேலுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் நிறுத்த அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நீண்டகாலமாக இஸ்ரேல் மக்களை கைவிட்டு ஹமாஸை பாதுகாத்து வருவதாக இஸ்ரேலின் நிரந்தர பிரதிநிதி மைரவ் அய்லன் குற்றம் சுமத்தியுள்ளார்.

Exit mobile version