உலகம்
பிரித்தானியாவை உலுக்க வரும் புயலுக்கு கேத்லீன் பெயர்
பிரித்தானியாவை உலுக்க வரும் புயலுக்கு கேத்லீன் பெயர்
இந்த வார இறுதியில் பிரித்தானியாவை கேத்லீன்(Kathleen) என பெயரிடப்பட்டுள்ள புயல் வலிமையாக தாக்க இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கேத்லீன் புயலால் (Kathleen Storm) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கனத்த மழை, பனி மற்றும் ஆபத்தான பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையோர பகுதிகளில் சனிக்கிழமையில் 70 மை/மணி வேகத்தை மீறிய புயல் காற்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்று பயண இடையூறுகளுக்கு குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனத்த மழை மற்றும் உள்ளூர் வெள்ளப்பெருக்கின் சாத்தியத்துடன், குறிப்பாக மத்திய ஸ்காட்லாந்தில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேத்லீன் புயலால் (Kathleen) கார்க்(Cork), கெர்ரி(Kerry), கால்வே(Galway) மற்றும் மாயோ(Mayo) ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.