உலகம்

நிலவில் ஓடித்திரிய வாகனம்

Published

on

நிலவில் ஓடித்திரிய வாகனம்

நிலவிற்கு மனிதன் செல்ல முடியுமா என்ற காலம் போய் தற்போது நிலவில் மனிதன் பயணம் செய்ய வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது அமெரிக்க விண்வெளி மையமான நாசா.

இதற்காக வாகனத்தை தயாரிப்பதற்கு மூன்று நிறுவனங்களை இன்று வியாழக்கிழமை தெரிவு செய்துள்ளது நாசா.

இந்த வாகனத்தை வடிவமைக்கும் பணி இன்டியூடிவ் மெஷின்ஸ், லுனார் அவுட்போஸ்ட் மற்றும் வென்டுரி ஆஸ்ட்ரோலேப் ஆகிய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் விண்வெளி வீரர்களின் ஆய்வுக்கான சாத்தியத்தை அதிகரிக்கும் எனவும் நிலவின் மேற்பரப்பு குறித்து அதிகமாக அறிய உதவும் எனவும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நிலவின் கடினமான சூழலை தாங்கும் திறன் கொண்டதாக இந்த வாகனம் இருக்க வேண்டும். ஆர்டிம்ஸ் 5 திட்டத்தில் இருந்து பயன்படுத்தப்படும் வாகனத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களான தானியங்கி ஓட்டுநர் வசதி, ஆற்றல் மேலாண்மை, தொடர்பு மற்றும் வழிகாட்டி வசதிகள் ஆகியவை இணைக்கப்பட வேண்டியிருக்கும்.

இதற்காக 4.6 பில்லியன் அமெரிக்க டொலரை நாசா ஒதுக்கியுள்ளது. மூன்று நிறுவனங்களும் நாசாவின் தேவையை அறிந்து கொள்ள 1 ஆண்டு ஆய்வு செய்யவுள்ளன. அதன் பிறகு சோதனை திட்டத்தில் வாகனம் நிலவுக்கு அனுப்பப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

Exit mobile version