உலகம்

உலகின் மிகப்பெரும் சூரிய கிரகணம் : மாற்றுத் திறனாளிகளுக்கு அதிஷ்டம்

Published

on

உலகின் மிகப்பெரும் சூரிய கிரகணம் : மாற்றுத் திறனாளிகளுக்கு அதிஷ்டம்

எதிர்வரும் 8ஆம் திகதி நிகழும் சூரிய கிரகணத்தை, வட அமெரிக்காவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கேட்கவும் உணரவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வட அமெரிக்காவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்தக் கருவியை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு ஒட்டுமொத்த சூரிய கிரகணத்தையும் மாற்றுத்திறனாளிகள் ஒலி மூலம் கேட்கவும், தொடுவதன் மூலம் உணரவும் முடியும்.

பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் வானியல் அறிஞரான வாண்டா டியாஸ் மெர்சட் மற்றும் ஹோவாட் வானியல் அறிஞர் ஆலிசன் பெரைலா இருவரும் இணைந்துதான் இந்த கருவியைக் கண்டுபிடித்தனர்.டியாஸ் மெர்செட் வழக்கமாக தனது ஆராய்ச்சிகளுக்காக அனைத்தையும் ஓடியோவாக பதிவு செய்து அதனை ஆய்வு செய்து வந்தவர்.

முதல் முறையாக அமெரிக்காவில் 2017ஆம் ஆண்டு கிரகணத்தின் போது இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டது. பிறகு அனைத்து கிரகணங்களின் போதும் இந்தக் கருவியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 750 கருவிகளை தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெக்ஸிகோ, அமெரிக்கா, கனடாவிலும் இது வழங்கப்படவிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான கருத்தரங்ககளும் நடத்தப்படுகின்றன.

 

Exit mobile version