உலகம்

இளவரசர் ஹரிக்கு சவால் விடும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

Published

on

இளவரசர் ஹரிக்கு சவால் விடும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய இளவரசர் ஹரியை வம்புக்கு இழுத்துக்கொண்டே இருக்கிறார்.

2020ஆம் ஆண்டு, பிரித்தானிய இளவரசரான ஹரியும் அவரது மனைவியான மேகனும், மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்னும் பொறுப்பிலிருந்து விலகி அமெரிக்காவில் குடியமர்ந்தார்கள்.

அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப், ஹரி மேகனுடைய பாதுகாப்புக்கு அமெரிக்க அரசாங்கம் நிதி வழங்காது என்று கூறியிருந்தார்.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அவ்வப்போது ஹரியை வம்புக்கிழுத்தவண்ணம் உள்ளார்.

ஜோ பைடன் அரசு ஹரியை பாதுகாப்பதாகவும், தான் ஜனாதிபதியானால், ஜோ பைடனைப்போல தான் ஹரியை பாதுகாக்கமாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

தான் ஜனாதிபதியானால், ஹரியை அமெரிக்காவை விட்டு வெளியேற்றிவிடுவேன் என்று ட்ரம்ப் மிரட்டிக்கொண்டேயிருந்தும், ஹரி தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் எரிச்சலடைந்துள்ளார் ட்ரம்ப்.

ஆகவே, எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஹரி, இந்த வியாழக்கிழமை நீங்களும் நானும் ஒற்றைக்கு ஒற்றை மோதிப்பார்க்கலாம், நான் ஜெயித்தால் நீங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிடவேண்டும். நீங்கள் ஜெயித்தால்… அதுதான் நடக்காதே, என்று கேலி செய்யும் விதத்தில் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.

ஹரி அதற்கு பதிலளிக்கவில்லை என்றாலும், ஹரிக்கு நெருக்கமான ஒருவர், ட்ரம்ப் அடுத்த சில மாதங்களில் ஜனாதிபதி போட்டியில் நிற்கவிருக்கும் நிலையில், அவருடன் மோதி, அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதன் மூலம் ஹரி தனது இமேஜையோ, அமெரிக்காவில் வாழும் வாய்ப்பையோ கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என கேலியாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version