உலகம்

பிரான்சில் மாயமான குழந்தையின் உடல் ’சபிக்கப்பட்ட கிராமத்தில்’ 

Published

on

பிரான்சில் மாயமான குழந்தையின் உடல் ’சபிக்கப்பட்ட கிராமத்தில்’

பிரான்சில் மாயமான குழந்தை ஒன்றின் உடல், 9 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலுள்ள Le Vernet என்னும் கிராமத்தைச் சேர்ந்த Emile Soleil என்னும் இரண்டு வயதுச் சிறுவன், 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் காணாமல் போனான்.

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, சனிக்கிழமையன்று, மலையேற்றத்துக்குச் சென்ற ஒருவர் உயிரற்ற குழந்தை ஒன்றின் உடலைக் கண்டு பொலிசாருக்கு தகவலளித்த நிலையில், அது Emileஉடைய உடல் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் மாயமான குழந்தையின் உடல் ’சபிக்கப்பட்ட கிராமத்தில்’ கண்டுபிடிப்பு | Body Of Mysterious Child In France
Image: AFP via Getty Images

குழந்தை எப்படி இறந்தான் என்பது போன்ற விடயங்களைக் கண்டறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுவருகிறார்கள்.

இதற்கிடையில், Le Vernet கிராமத்தை, சபிக்கப்பட்ட கிராமம் அல்லது கடவுளின் கோபத்துக்கு ஆளான கிராமம் என்கிறார்கள் அக்கிராம மக்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே, அதிர்ச்சியளிக்கும் பல உயிரிழப்புகள் அங்கு நடந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், 2015ஆம் ஆண்டு, ஏர்பஸ் விமானம் ஒன்றின் விமானியான Andres Lubitz என்பவர், வேண்டுமென்றே, விமானத்தைக் கொண்டு அந்த பகுதியிலுள்ள மலையில் மோதியதைச் சொல்லலாம் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

அந்த விமானம் மலையில் மோதி நொறுங்கியதில், 150 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version