உலகம்

கனடாவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்

Published

on

கனடாவில் அதிகரிக்கும் நோய் தாக்கம்

கனடாவில் குரங்கம்மை நோய் தொற்று பரவுகை அதிகரித்துள்ளமை தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.

இதன்படி, கனடாவின் ஒன்றாரியோ(Ontario) மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுச் சுகாதார அதிகாரிகள் குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்த நிலையில் கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில் 26 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவு பதிவான பகுதியாக ரொறன்ரோ (Toronto) காணப்படுவதோடு, அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 77 வீதமான நோயாளர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நோய் அறிகுறிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version