உலகம்

20 ஆண்டுகளாக கோடீஸ்வரர் என்பதை மகனிடம் மறைத்த தந்தை!

Published

on

20 ஆண்டுகளாக கோடீஸ்வரர் என்பதை மகனிடம் மறைத்த தந்தை!

தந்தை ஒருவர் தனது மகனிடம் தான் ஒரு கோடீஸ்வரர் என்பதை மறைத்து 20 ஆண்டுகளாக ஏழை என்று நாடகமாடி வந்துள்ளார்.

சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த கோடீஸ்வரர் ஜாங் யூடொங் ( Zhang Yudong). இவர் தனது மகன் ஜாங் ஜிலோங்கிடம் (Zhang Zilong) 20 ஆண்டுகளாக தான் ஒரு ஏழை என்று நாடகமாடி வந்துள்ளார்.

சமீபத்தில் மகன் ஜாங் ஜிலோங் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அந்த பேட்டியில், “எனக்கு 20 வயது ஆகும் வரை நாங்கள் கோடீஸ்வரர் என்பதே எனக்கு தெரியாது.

சாதாரண குடியிருப்பில் தான் வசித்து வந்தோம். சாதாரண பள்ளியில் தான் நான் படித்தேன். எங்களுக்கு ஒரு நிறுவனம் இருக்கிறது என்றும், அந்நிறுவனம் கடனில் இயங்குகிறது என்றும் தந்தை கூறியிருந்தார்.

அதனால் கடனை அடைக்க வேண்டும் என்று நான் கடுமையாக படித்தேன். மேலும், படிக்கும் போதே மாதம் 6 ஆயிரம் யுவான் சம்பளத்திற்கு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கு சேர்ந்தேன். அந்த சம்பளத்தை வைத்து கடனை அடையுங்கள் என்று அபபாவிடம் கூறுவேன் .

பின்னர், நான் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் தங்களது பொருளாதார நிலையை பற்றியும், சொத்து விபரத்தையும் பற்றியும் எனது தந்தை தெரிவித்தார். அவர் அப்படி பொய் கூறியதால் தான் உழைப்பை பற்றி தெரிந்தது” என்று கூறினார்.

Exit mobile version