உலகம்

பால்டிமோர் கப்பல் விபத்து… மாயமான 6 பேர்கள் நிலை என்ன

Published

on

பால்டிமோர் கப்பல் விபத்து… மாயமான 6 பேர்கள் நிலை என்ன

பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்று மேரிலாந்து மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த விபத்தானது 8 கட்டுமான ஊழியர்களையும் சில வாகனங்களையும் Patapsco நதியில் மூழ்கடித்துள்ளது. ஆனால் செவ்வாய்க்கிழமை இருவர் காப்பாற்றப்பட்டனர். தற்போது எஞ்சிய ஆறு பேர்களும் மரணமடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நதியின் ஆழம் மற்றும் விபத்து நடந்த பின்னர் மீட்க முடியாமல் போனது உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், மீட்பு நடவடிக்கை தொடரும் என்றே மேரிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய கப்பலின் 22 ஊழியர்களும் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்கள் கரைக்கு திரும்ப 2 வாரங்கள் ஆகலாம் என்றே கூறப்படுகிறது.

1977ல் கட்டுமானம் முடிக்கப்பட்ட அந்த பாலமானது, விபத்து ஏற்படும் வரையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றே அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். ஆனால் இதே கப்பல் பெல்ஜியம் நாட்டில் 2016ல் கால்வாய் ஒன்றில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

பால்டிமோர் பாலத்தில் மோதியதும், நள்ளிரவு 1.30 மணியளவில் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர். சம்பவத்தின் போது பல வாகனங்களும் அந்த பாலத்தில் கடந்து சென்றுள்ளது.

விபத்தை அடுத்து அந்த கப்பலின் ஒருபகுதி தீ பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த 6 பேர்களில் ஒருவரது பெயர் உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளது.

எல் சல்வடோர் பகுதியை சேர்ந்த Miguel Luna என்பவரே அந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையான தகவல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றே குடும்ப உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கப்பல் மோதும் போது அந்த பாலத்தில் 6 பேர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் 6 பேர்களும் மரணமடைந்திருக்கவே வாய்ப்புள்ளதாக கட்டுமான நிறுவனமும் தற்போது அறிவித்துள்ளது.

 

Exit mobile version