உலகம்

உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? அந்த நபரின் சொத்து மதிப்பு!

Published

on

உலகின் பணக்கார அரசியல்வாதி யார் தெரியுமா? அந்த நபரின் சொத்து மதிப்பு!

உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான் உலகின் பணக்கார அரசியல்வாதி ஆவார்.

உலகின் முதல் பணக்காரர் யார்? இரண்டாவது பணக்காரர் யார்? அவரின் சொத்து மதிப்பு மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து அறிந்து கொள்ளவும் விவாதிக்கவும் நம்மில் பெரும்பாலானோர் ஆர்வமாக இருப்போம்.

ஆனால் என்றாவது உலகின் பணக்கார அரசியல்வாதி யார் என்று யோசித்து இருப்போமா! இந்த எண்ணிக்கை மிக குறைவாகவே இருந்து இருப்போம்.

அறிக்கைகளின் படி, உலகின் பணக்கார அரசியல்வாதி வேறு யாரும் இல்லை, உக்ரைன் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தான்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிட்டத்தட்ட $200 பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அதிபதி (அதாவது சுமார் Rs 16,71,877 கோடி ரூபாய்) ஆவார் என்று தரவுகள் கூறுகின்றன.

இவற்றில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருட சம்பளம் $140,000 டொலராகும் (அதாவது Rs 1 கோடி).

புடினுக்கு சொந்தமாக ஆடம்பரத்தின் எடுத்துக்காட்டாக அவரது கருங்கடம் மாளிக்கை உள்ளது, இதற்கு “நாட்டு குடிசை”(Country Cottage) என்று புடின் பெயரிட்டுள்ளார்.

இது தவிர 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், 19 வீடுகள், ‘தி ஃப்ளையிங் கிரெம்ளின்’(The Flying Kremlin) என்று அழைக்கப்படும் 716 மில்லியன் டொலர் மதிப்புடைய சொகுசு விமானம் உள்ளது.

அத்துடன் புடினுக்கு சொந்தமாக 700 மில்லியன் டொலர் மதிப்பிலான “Scheherazade” என்ற சொகுசு கப்பலும் உள்ளது.

Exit mobile version