உலகம்

வெங்காய ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டித்த இந்தியா

Published

on

வெங்காய ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டித்த இந்தியா

வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது.

மார்ச் 31-ஆம் திகதி வரை விதிக்கப்பட்ட வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

உலகின் மிகப்பாரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டதால் உள்ளூர் விலை பாதியாக குறைந்துள்ளது.

இந்த சீசனில் புதிய விளைபொருட்கள் வருவதால் இந்த தடை அகற்றப்படும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், சமீபத்தில் மீண்டும் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது இந்திய அரசு.

மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு வியாபாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வெங்காயத்தின் மிகப்பாரிய உற்பத்தியாளரான மகாராஷ்டிராவின் சில மொத்த விலை சந்தைகளில் வெங்காயத்தின் விலை டிசம்பர் மாதத்தில் 100 கிலோவுக்கு ரூ.4,500 முதல் ரூ.1,200-ஆக குறைந்தது.

ஏப்ரல் 19 முதல் ஏழு வாரங்களுக்கு நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

பங்களாதேஷ், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியை நம்பியுள்ளன. மத்திய அரசின் தடையை அடுத்து, அந்தந்த நாடுகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Exit mobile version