உலகம்

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் பாதிப்பு: மௌனம் காத்தது ஏன்?

Published

on

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் பாதிப்பு: மௌனம் காத்தது ஏன்?

இளவரசி கேட், தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள தகவல், ராஜ குடும்ப ரசிகர்களையும், பிரித்தானிய மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசி கேட், ஜனவரி மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். ஆனால், அதற்குப் பின் அவரைக் குறித்து எந்த செய்தியும் வெளியாகாததால், அவருக்கு என்ன ஆயிற்று என உண்மையாகவே அக்கறையுடன் ஒரு கூட்டமும், ஆர்வத்துடன் ஒரு கூட்டமும் யோசிக்கத் துவங்க, அவரைக் குறித்த வதந்திகள் பரவத்துவங்கின.

அவர் இறந்துவிட்டார், வில்லியமைப் பிரிந்துவிட்டார் என்றெல்லாம் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், ஊடகங்கள் எழுதவும், கேலி பேசவும் செய்தன.

இந்நிலையில், தனக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதாகவும், தான் அதற்கான சிகிச்சையிலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இளவரசி கேட். வெளியான அந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில், ஏன் இவ்வளவு நாட்களாக அந்த செய்தி வெளியிடப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.

கேட், நாட்டுக்கு இளவரசி என்றாலும், தன் பிள்ளைகளுக்குத் தாய். அந்த சின்னஞ்சிறு பிள்ளைகளால், தங்கள் அன்புத் தாய்க்கு புற்றுநோய் என்ற செய்தியை எப்படித் தாங்கிக்கொள்ளமுடியும்?

ஆகவேதான், இளவரசிக்கு புற்றுநோய் என்னும் செய்தியை வெளியிட அரண்மனை வட்டாரம் தாமதப்படுத்திவந்ததாக தற்போது அவரது நலம் விரும்பிகள் கூறுகிறார்கள்.

அத்துடன், கேட் வில்லியமுக்கிடையிலான அன்பும் உலகம் அறிந்ததே. ஆகவேதான், தன் மனைவிக்கு உடல் நல பாதிப்பு என தெரியவந்ததும், முக்கியமான நிகழ்ச்சிகளை ரத்து செய்டுவிட்டு தன் மனைவியின் அருகில் அவருக்கு ஆதரவாக இருப்பதற்காக ஓடியிருக்கிறார் இளவரசர் வில்லியம்.

இதுவரை இளவரசியை மோசமாக கேலி செய்தவர்களும், விமர்சனம் செய்தவர்களும் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்துக்கொள்ளப்போகிறார்கள் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்!

Exit mobile version