உலகம்

தனியாக சஹாரா பாலைவனம் வழியே 3,500 மைல்கள் நடந்த சிறுவன்

Published

on

தனியாக சஹாரா பாலைவனம் வழியே 3,500 மைல்கள் நடந்த சிறுவன்

கல்வி கற்க வேண்டும் என்ற ஆசையுடன் எட்டு வயது சிறுவன் ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிக்கு 3,500 மைல்கள் தனியாக பயணம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான மாலிக்கு மேற்கே அமைந்துள்ள Tambaga கிராமம் அருகே வசித்து வந்த 8 வயது Oumar என்ற சிறுவன், நான்கு மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத குழு ஒன்றின் தாக்குதலை அடுத்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்த சிறுவன், வீட்டுக்கு திரும்புவதை விரும்பாமல் தனியாக சஹாரா பாலைவனம் வழியே நடக்கத் தொடங்கியுள்ளான்.

இந்த பயணத்தில் பல்வேறு குழுக்களை சந்தித்த சிறுவன், இறுதியில் லிபியா சென்று சேர்ந்துள்ளான். ஆனால் லிபியாவில் திடீர் திருப்பமாக உல்ளூர் குழு ஒன்றிடம் சிக்கி வெல்டராகவும் பெயிண்டராகவும் வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஒருகட்டத்தில் அவர்களிடம் இருந்து தப்பி மத்தியத்தரைக் கடல் கடந்து ஐரோப்பாவுக்கு நுழைந்துவிட சிறுவன் முடிவு செய்துள்ளான். ஆனால் சிறுவன் Oumar பயணித்த சிறு படகை லிபியா கடற்படை கைப்பற்றியது.

அத்துடன் மிகவும் கொடூரமான Ain Zara சிறையில் தள்ளினர். குப்பை அள்ளும் இருவரின் உதவியுடன், சிறையில் இருந்து தப்பிய சிறுவன், Zawiya கடற்கரையில் இருந்து இரண்டாவது முறையாக சிறு படகில் பயணிக்க தயாராகியுள்ளான்.

மொத்தம் 23 சிறார்கள், 60 நபர்களுடன் சிறுபடகு புறப்பட தொண்டு நிறுவனம் ஒன்றின் படகு மூலமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்புடைய தொண்டு நிறுவனத்தின் படகில் இருந்த இத்தாலிய பத்திரிகையாளர் ஒருவரிடம் தமது கதையை Oumar கூறியுள்ளான்.

Angela Nocioni என்ற அந்த பத்திரிகையாளர் தம்மால் இயன்றதை செய்யவும் உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில் Ancona புலம்பெயர் மக்கள் மையத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட, அங்குள்ள இயக்குனர் உள்ளூர் பாடசாலை ஒன்றில் சிறுவனுக்கு வாய்ப்பளிக்க உதவுவதாக தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் கல்வி கற்க வேண்டும் என்ற 8 வயது சிறுவனின் கனவு கடும் போராட்டத்திற்கு பின்னர் சாத்தியமாகியுள்ளது.

Exit mobile version