உலகம்

ஜேர்மன் அரசுக்கு மன நல பாதிப்பு: ரஷ்யா தாக்கு

Published

on

ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் இருப்பதாக ரஷ்யா விமர்சித்துள்ளது.

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்படவில்லை என மேற்கத்திய நாடுகள் கூறிவரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்ய ஜனாதிபதி புடினை, ஜனாதிபதி என குறிப்பிடப்போவதில்லை என ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ் அறிவித்துள்ளார்.

ஜேர்மனியின் முடிவு ரஷ்யாவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அது முட்டாள்தனமான முடிவு என கடும் விமர்சனம் முன்வைத்துள்ள ரஷ்யா, ரஷ்ய ஜனாதிபதி புடினை ஜனாதிபதி என அழைக்கப்போவதில்லை என ஜேர்மனி எடுத்துள்ள முடிவு அபத்தமானது என்றும், ஓலாஃப் அரசின் இந்த முடிவு, ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளாகத் தெரிவதாகவும் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது.

Exit mobile version