உலகம்

மூளைச்சாவு அடைந்து பின் உயிர்பிழைத்த நபர்

Published

on

அமெரிக்காவில் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்கு சென்ற நபர் ஒருவர் போராடி நோயில் இருந்து மீண்டுள்ளார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 மில்லியன் மக்களை செப்சிஸ் (Sepsis) எனும் கொடிய நோய் பாதிக்கிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் இறப்புக்கான 3வது பொதுவான காரணமாக செப்சிஸ் நோய் உள்ளது.

அதாவது ஆண்டுக்கு 2,70,000 பேரை இந்நோய் கொல்கிறது என CDC அறிக்கைகள் கூறுகின்றன. இந்த நோயை கண்டறிவது கடினமாக இருந்தாலும், நோயாளிக்கு வலிமையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்டால், இது பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியது.

ஸ்டீவன் என்ற நபர் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டின் பிற்பகுயில் ஆபத்தான இந்த நோயால் பாதிக்கப்பட்டதாக, அவரது சகோதரி வெளியிட்ட டிக்டோக் வீடியோக்கள் தெரிவித்தன.

அவருக்கு கால் இடுப்புப் பகுதியில் இருந்து வளர்ந்த முடியை அகற்றும் முயற்சியில் ஏற்பட்ட நோய்த்தொற்றின் விளைவாக பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக இரத்த உறைவு, நிமோனியா, உறுப்பு செயலிழப்பு மற்றும் நுரையீரல் நிலை ARDS – கடுமையான சுவாசக் கோளாறு ஆகிய ஆபத்தான சிக்கலுக்கு வழிவகுத்தது.

அவரது இதயத்தை இந்த பாக்டீரியா நோய்த்தொற்று அடைந்துவிட்டது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தபோது, ஸ்டீவனின் மிகவும் மோசமாக இருந்ததால் அவரால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியவில்லை.

இதனால் அவரது உடலில் ஏற்பட்ட அனைத்து சிக்கல்களின் காரணமாக, மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் அவர் வைக்கப்பட்டு குணப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக அறிவித்த மருத்துவர்கள், உயிர் பிழைப்பதற்கான 4 சதவீத வாய்ப்பு உள்ளதாக கூறினர்.

கோமாவில் இருந்த மாதம் முழுவதும் ஸ்டீவனுக்கு பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, உறுப்பில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இவ்வாறு பல அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் ஸ்டீவனால் சுயமாக சுவாசிக்க முடிந்தது. மேலும் அவர் கோமாவில் இருந்து விடுபட்டார். மூளை பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், ஸ்டீவன் தனது பயணத்தில் இருந்து கிட்டத்தட்ட முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

 

Exit mobile version