உலகம்

ஜோ பைடன் வரலாற்றில் மோசமான ஜனாதிபதி! டொனால்டு டிரம்ப் விளாசல்

Published

on

ஜோ பைடன் வரலாற்றில் மோசமான ஜனாதிபதி! டொனால்டு டிரம்ப் விளாசல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையாக விளாசினார்.

ஜனாதிபதி ஜோ பைடனும், முதல் பெண்மணி ஜில் பைடனும் வெள்ளை மாளிகையில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸுடன் மகளிர் வரலாற்று மாத வரவேற்பை நடத்தினர்.

அப்போது, ‘நம்ப முடியாத பணியைச் செய்து கொண்டிருக்கும் ஒரு வரலாற்று துணைத்தலைவர் கமலா ஹாரிஸ்’ என ஜோ பைடன் கூறினார்.

இந்த நிலையில், WABC வானொலி தொகுப்பாளரான Sid Rosenberg உடனான நேர்காணலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை கடும் விமர்சனம் செய்தார்.

அவர் பேசுகையில், ”பைடன் நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி மற்றும் அவருக்கு ஒரு துணை ஜனாதிபதி இருக்கிறார். அவர் ஒரு மொத்த பேரழிவு. அவர்கள் மாற்ற நினைக்கிறார்கள், அதற்காக இறக்கிறார்கள். ஆனால் மாற்றத்திற்கு அவர்கள் பயப்படுகிறார்கள்.

ஜோ பைடன் குழப்பதைக் கொண்டிருக்கிறார் மற்றும் அவரே ஒரு குழப்பம் தான். வரலாற்றில் இதுபோன்ற மோசமான அணி இருந்ததில்லை. உண்மையில், கமலா ஹாரிஸ் அவரை விட குறைவான பிரபலம்” என்றார்.

வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ஜனநாயகக் கட்சியினர், கமலா ஹாரிஸின் செயல்பாடுகளை மறைமுகமாக புகார் செய்கிறார்கள். ஆனால், அவர் வரலாற்றில் முதல் கறுப்பின துணை ஜனாதிபதி என்பதால், பகிரங்கமாக அவரை விமர்சிக்க தயங்குகிறார்கள்.

அதேபோல் அரசியல் விமர்சகர்கள் எப்போதாவது கமலா ஹாரிஸை ஒதுங்குமாறு அழைப்பு விடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version