உலகம்
சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் சட்டப்பூர்வமாக துப்பாக்கி எடுத்துச்செல்லலாம்!
சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் சட்டப்பூர்வமாக துப்பாக்கி எடுத்துச்செல்லலாம்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம்பெயரும் நபர்கள் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம் என நீதிபதி அளித்த தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.
ஜோ பைடனின் நிர்வாகம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேற்றத்துடன் பெரிதும் போராடி வருகிறது.
சமீபத்திய வாரங்களில் பல்வேறு குற்றங்களுக்காக சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோதமாக குடியேறிய Heriberto Carbajal-Flores என்ற நபர், ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
இந்த வழக்கில் நீதிபதி ஷரோன் ஜான்சன் கோல்மன் பரபரப்பு தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், சட்டவிரோதமாக குடியேறியவர் துப்பாக்கி வைத்திருப்பதற்குத் தவறாக தடை செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
பின்னர் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை எடுத்துச் செல்லலாம் என தீர்ப்பளித்தார்.
மேலும் அவர், ”Carbajal-Flores ஒரு குற்றம், வன்முறைக் குற்றம் அல்லது ஆயுதத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்காக ஒருபோதும் தண்டிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிடுகிறது” என்று எழுதினார்.