உலகம்
வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து குவிந்த ஆயுதங்கள்
வடகொரியாவிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து குவிந்த ஆயுதங்கள்
வட கொரியா கடந்த ஆண்டு முதல் ரஷ்யாவிற்கு சுமார் 7,000 கொள்கலன்கள் அடங்கிய வெடிபொருட்கள் மற்றும் பிற இராணுவ உபகரணங்களை அனுப்பியுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஷின் வோன்-சிக் கூறுகையில்,
வடகொரியா கடந்த ஆண்டு முதல் வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் நிரப்பப்பட்ட சுமார் 7,000 கொள்கலன்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது.
வடகொரியா நாட்டின் கிழக்கு கடற்பகுதியில் குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியது என்று தென் கொரிய இராணுவம் அறிவித்த பல மணிநேரங்களுக்குப் பிறகு தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.
இராணுவ ஆதரவிற்கு ஈடாக வடகொரியா 9,000 கொள்கலன்களுக்கு மேல் உதவியைப் பெற்றிருக்கலாம் என்று ஷின் வோன்-சிக் குறிப்பிட்டார்.
வடகொரியா கப்பல்களை நம்பியிருந்ததாகவும், ஆனால் தற்போது எல்லை தாண்டிய ஆயுத விநியோகத்திற்காக தொடருந்தை அதிகளவில் பயன்படுத்துவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.