உலகம்

உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரம் : முதலிடத்தில் உள்ள நகரம்

Published

on

உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரம் : முதலிடத்தில் உள்ள நகரம்

உலகில் அதிக மில்லியனர்கள் வாழும் நகரங்களின் பட்டியில், நியூ யோர்க் முதலிடத்தை பிடித்துள்ளது.

இதன்படி, சுமார் 340 ஆயிரம் மில்லியனர்கள் தற்போது நியூ யோர்க் நகரில் வாழ்கின்றனர். இது நியூ யோர்க்கின் மொத்த சனத்தொகையில், 4 வீதம் என இணையதரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், மில்லியனர்கள் மாத்திரமின்றி சுமார் 58 பில்லியனர்களும் நியூ யோர்க்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார நிலை மேம்பட்டு வரும் நிலையில், புதிதாக உருவாகும் மில்லியனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 2010 ஆம் மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கிடையிலான காலப்பகுதிக்குள் 65 வீதத்தால் மில்லியனர்கள் அதிகரித்துள்ளனர்.

இந்த வரிசையில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முன்நிற்கின்றன.

டோக்கியோ
இந்த நிலையில், அதிக மில்லியனர்களை கொண்ட நாடாக கடந்த சில காலங்களாக முதலிடத்தில் இருந்த டோக்கியோ, தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

டோக்கியோவில் சுமார் 2 இலட்சத்து 90 ஆயிரத்து 300 மில்லியனர்கள் இருந்துள்ளனர்.

எனினும், தற்போது உலகளாவிய நிதி மையமாக காணப்படும் நியூயோர்க்கி, அதிகளவான மில்லியனர்களை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து, தி பே ஏரியா, லண்டன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்கள் அதிக மில்லியனர்கள் வாழும் பட்டியலில் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version