உலகம்
சுவிஸ் மாகாணமொன்றில் 2,500 பேர் திரண்டு பேரணி
சுவிஸ் மாகாணமொன்றில் 2,500 பேர் திரண்டு பேரணி
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் 2,500 பேர் திரண்டு பேரணியில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சனிக்கிழமையன்று, காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கக் கோரியும், ஆக்கிரமிப்பைக் கைவிடக்கோரியும் சுமார் 2,500 பேர் ஜெனீவாவில் திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.
Les Grottes என்னுமிடத்தில் துவங்கிய பேரணி, Place Neuve என்னுமிடத்தில் முடிவடைந்தது. பேரணியில் ஈடுபட்டோர் Mont-Blanc பாலம் வழியாகச் சென்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பேரணியில் கலந்துகொண்ட ஒருவர், சர்வதேச மனிதநேய சட்டத்தை கடைப்பிடிப்பதும், அதற்கு இடையூறு ஏற்படும்போது அநீதிக்கெதிராக குரல் கொடுப்பதும் சுவிட்சர்லாந்தின் கடமை என்று கூறினார்.
மாகாணத்தில் நடைபெற்ற பேரணி பொலிசாரின் கடுமையான கண்காணிப்பின் கீழ நடந்ததால், பெரிய அளவில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.