உலகம்
புகைப்பட சர்ச்சைக்கு கேட் மிடில்டன் பொறுப்பேற்றதன் பின்னால் நொறுங்கவைக்கும் காரணம்
புகைப்பட சர்ச்சைக்கு கேட் மிடில்டன் பொறுப்பேற்றதன் பின்னால் நொறுங்கவைக்கும் காரணம்
கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட அன்னையர் தின புகைப்பட சர்ச்சைக்கு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் பொறுப்பேற்றதன் பின்னணியில் நொறுங்கவைக்கும் காரணம் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் எங்கே என்ற கேள்வி பிரித்தானிய மக்களிடையே, பெரும் விவாதத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திடீரென்று கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றில் அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதாகவும் அரண்மனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் ஓய்வெடுப்பதாகவும் குணமடைந்து வருவதாகவும் மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
இதுவே, அரண்மனை ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மட்டுமின்றி, முதல் முறையாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்ட புகைப்படம் ஒன்றும் பெரும் விவாதத்தில் சிக்கியது.
அன்னையர் தினத்தில் கேட் மிடில்டன் ஒப்புதலுடன் வெளியிடுவதாக குறிப்பிட்டு, இளவரசர் வில்லியம் தவிர்த்து குடும்ப புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. தொடர்புடைய புகைப்படம் திருத்தப்பட்டது என்ற சர்ச்சை சர்வதேச அளவில் பேசுபொருளானது.
மட்டுமின்றி, குறித்த புகைப்படத்தில் கேட் மிடில்டனின் திருமண மோதிரமும் காணப்படவில்லை என்பதும் சர்ச்சையானது. இந்த நிலையில், புகைப்பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கேட் மிடில்டனே பொறுப்பேற்று பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார்.
ஆனால், கேட் மிடில்டனின் இந்த அறிக்கையின் பின்னால் நொறுங்கவைக்கும் காரணம் ஒன்று இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 2012ல் கேட் மற்றும் வில்லியம் தொடர்பில் அந்த சம்பவம் நடந்துள்ளது.
அப்போது குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறக்கவில்லை. Jacintha Saldanha என்ற செவிலியர் ஏழாவது எட்வர்ட் மன்னர் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி டிஜேக்கள் இருவர் ராணியார் மற்றும் அப்போதைய இளவரசர் சார்லஸ் போன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட மூன்றாவது நாள் Jacintha Saldanha தற்கொலை செய்து கொண்டார்.
மகப்பேறுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேட் மிடில்டனை கவனித்துவரும் செவிலியருக்கு அந்த அழைப்பை திருப்பி விட்டவர் இந்த Jacintha Saldanha.
அந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களில் Jacintha Saldanha தற்கொலை செய்துகொள்ள, அது கேட் – வில்லியம் தம்பதியை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்களுக்காக பணியாற்றும் ஒருவர் கண்டிப்பாக இனி பொதுவெளியில் தலைகுனிவை எதிர்கொள்ள கூடாது என்ற முடிவுக்கு கேட் மிடில்டன் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவமே தற்போதைய புகைப்பட சர்ச்சைக்கு பொறுப்பேற்கும் நிலைக்கு கேட் மிடில்டனை தள்ளியுள்ளதாக கூறுகின்றனர்.