உலகம்

95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை! ஏன் தெரியுமா?

Published

on

95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை! ஏன் தெரியுமா?

ரோமின் வாடிகன் நகரில் கிட்டத்தட்ட 95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்பது தெரியுமா!

ரோமின்(Rome) வாடிகன் நகரம்(Vatican city), உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். இது 44 ஹெக்டேர் பரப்பளவில், 800க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

1929ம் ஆண்டு லேட்டரன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதில் இருந்து, இது சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆச்சரியகரமான விஷயம் என்னவென்றால், கடந்த 95 வருடங்களாக, அதாவது 1929ம் ஆண்டு முதல், வாடிகன் நகரில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை(No Child Births).

வாடிகன் நகர குடியுரிமை பெறுவதற்கு, ஒருவர் கத்தோலிக்க திருச்சபையில் பணிபுரியும் பாதிரியார் அல்லது துறவியாக இருக்க வேண்டும். இவ்வாறு குடியுரிமை பெறுபவர்களும் அவர்களது பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு வாழ முடியும்.

வாடிகன் நகரில் மருத்துவமனை அல்லது பிரசவ மையம் இல்லை. கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு அருகிலுள்ள ரோமின் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும்.

வாடிகன் நகரில் மருத்துவமனை இல்லாததற்கு அதன் சிறிய அளவு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் தரமான மருத்துவ வசதிகள் இருப்பதே காரணமாக கூறப்படுகிறது. வாடிகன் நகரம் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை.

இங்கு பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள் இல்லை. வாடிகன் நகரம் கருத்தடை மற்றும் கருக்கலைப்புக்கு கடுமையான தடைகளை விதித்துள்ளது.

இது குழந்தை பிறப்பு விகிதத்தை மேலும் குறைக்கிறது. வாடிகன் நகரில் குழந்தை பிறப்பு இல்லாதது ஒரு தனித்துவமான சூழ்நிலை.

இது மத சமூகம், சிறிய நிலப்பரப்பு, கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் குடியுரிமை விதிமுறைகள் போன்ற பல காரணிகளின் கலவையாகும்.

Exit mobile version