உலகம்

உக்ரைனின் ஆட்டம் டொனால்டு ட்ரம்பால் முடிவுக்கு வரும்

Published

on

உக்ரைனின் ஆட்டம் டொனால்டு ட்ரம்பால் முடிவுக்கு வரும்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தெரிவானால், உக்ரைனுக்கு போர் தொடர்பில் நிதியுதவிகள் மொத்தமாக நிறுத்தப்படும் என்று ஹங்கேரி பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ரஷ்ய – உக்ரைன் போர் முடிவு வரும் என்றும் ஹங்கேரி பிரதமர் Viktor Orban தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்தித்த பின்னர் Viktor Orban குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை புளோரிடாவில் தமது நீண்ட கால நண்பரை சந்தித்த Viktor Orban உக்ரைன் விவகாரத்தில் தமது ஆதரவையும் தெரிவித்துள்ளார். ட்ரம்புடனான சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களை எதிர்கொண்ட Viktor Orban,

உக்ரைன்-ரஷ்யா போருக்கு ஒரு பைசா கூட ட்ரம்ப் கொடுக்க மாட்டார், எனவே போர் முடிவுக்கு வரும். உக்ரைனால் டஹ்ற்போது பாரிய தொகையை போருக்கு என்று செலவிட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே என்றார்.

அமெரிக்க நிர்வாகம் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுக்கவில்லை என்றால், ஐரோப்பிய நாடுகளும் மறுத்துவிட்டால், பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் இந்த போர் முடிவுக்கு வந்துவிடும்.

அமெரிக்க நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளாலும் இந்த போருக்கு சொந்தமாக நிதியளிக்க முடியாத சூழல் உருவானால், பின்னர் போர் முடிவுக்கு வரும் என்பது உறுதி என்றார் Viktor Orban.

கடந்த 2022ல் ரஷ்யப் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து Viktor Orban உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க மறுத்து வருவதுடன், ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளையும் முன்னெடுத்து வருகிறார்.

ரஷ்யாவை தனிமைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்த போதிலும் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடந்த அக்டோபர் மாதம் சீனாவில் சந்தித்தார் Viktor Orban.

ஏற்கனவே ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு ஐரோப்பிய தலைவர்களை கலக்கமடைய செய்துள்ளது என்பதுடன், அது உக்ரைன் மற்றும் நேட்டோ நாடுகளை சிக்கலில் தள்ளும் என்றும் அஞ்சுகின்றனர்.

 

Exit mobile version