உலகம்

சிவப்பு கடலில் பதற்றம்! ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா

Published

on

சிவப்பு கடலில் பதற்றம்! ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்த அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா

ஏமன் கடல் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ட்ரோன்களை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய படைகள் முறியடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை சிவப்பு கடல் பகுதியில் சுற்றித் திரிந்த ஆளில்லா ட்ரோன் விமானங்களில் (UAVs) குறைந்தது 28 ட்ரோனகளை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

வணிக கப்பலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பெரிய தாக்குதல் குறித்து அறிந்த பிறகு, கூட்டணி படைகளுடன் இணைந்து பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மோதலின் போது அமெரிக்க கப்பலுக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஆனால் வணிக கப்பல் சேதம் குறித்து இன்னும் அறிக்கைகள் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Propel Fortune என்ற வணிக கப்பலையும், சில அமெரிக்க ராணுவ கப்பலையும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு துறை செயலர் Grant Shapps, ஹவுதி படைகளால் வெள்ளிக்கிழமை இரவு ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்கள் Royal Navy frigate HMS Richmond மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர்.

அத்துடன், உயிர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வழித்தட சுதந்திரத்திற்காக பிரித்தானியா மற்றும் அதன் கூட்டுப் படைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், பிரான்ஸின் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்கள் இணைந்து, 4 ஹவுதி ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளன.

இவை Aden வளைகுடா பகுதியில் இழுத்து செல்லப்பட்ட ஐரோப்பிய கடற்படை கப்பல் மற்றும் சரக்கு கப்பலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version