உலகம்

இலங்கை பெண்ணுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இந்திய குடியுரிமை

Published

on

இலங்கை பெண்ணுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இந்திய குடியுரிமை

இலங்கையில் பிறந்து இப்போது குடும்பத்துடன் கேரளாவின் வடகஞ்சேரியில் வசிக்கும் சரீனா தற்போது இந்திய குடியுரிமையை பெற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

சரீனா இலங்கையின் தலைநகரான கொழும்பில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் உள்ள மட்டுவாக்குளத்தில் பிறந்தார்.

1966-ஆம் ஆண்டு பிறந்த குல்சும், தனது 18வது வயதில் தனது உறவினர்களுடன் அபுதாபிக்கு குடிபெயர்ந்தார்.

1990-ஆம் ஆண்டு அரேபியர்களின் வீடு ஒன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

அப்போதுதான் வடகாஞ்சேரி குமரநெல்லூரைச் சேர்ந்த சாளிபரம்பில் வீட்டில் முகமது அலியைச் சந்தித்தார். முகமது அபுதாபி முனிசிபாலிட்டியில் பணிபுரிந்தார்.

இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்க, குல்சும் மற்றும் முகமது இருவரின் உறவினர்கள் சந்தித்து அவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரும் 1990ல் அபுதாபியில் திருமணம் செய்து கொண்டனர்.

1992-ல் குல்சும் தனது முதல் குழந்தை ஷரீபாவை கருவில் சுமந்துகொண்டிருந்தபோது, இந்தியாவுக்கு வர முடிவு செய்தார். பின்னர் விசா எடுத்து இந்தியாவிற்கு வந்து தனது மகளைப் பெற்றெடுத்த்துள்ளார்.

“நிரந்தரக் குடியுரிமை பெற, நான் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று எண்ணி, 1997-ல் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்.

இன்று போலல்லாமல், அந்த நாட்களில் குடியுரிமைக்கு தானே விண்ணப்பிப்பது ஒரு கடினமான பணியாக இருந்தது. நான் பலமுறை தொடர்ச்சியாக விண்ணப்பித்து, ஆவணங்களை சமர்ப்பித்து, சரிபார்கப்பட்டேன்.

ஆனால் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. குடியுரிமைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் விடாமுயற்சியுடன் சமர்ப்பித்தோம்.

அதற்குள் எனக்கு ஆரிஃபா, முஹம்மது கல்பான் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன.

இன்று, ஷரீஃபாவும் ஆரிஃபாவும் திருமணம் செய்துகொண்டனர், கல்பான் பட்டப்படிப்பைப் படிக்கிறார், ”என்று குல்சும் ஒன்மனோரமிடம் கூறினார்.

இந்தியாவிற்கு வந்து கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் கழித்து, புதன்கிழமையன்று ( 6 மார்ச் 2024) குல்சும் தனது பேரக்குழந்தைகள் ஷாரின், ஷெஸ்மின் மற்றும் இசான் மெஹ்பின் மற்றும் அவரது கணவர் முகமது முன்னிலையில் குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றார்.

திருச்சூர் ஆட்சியர் வி.ஆர்.கிருஷ்ண தேஜாவிடம் தனது இந்தியக் குடியுரிமைச் சான்றிதழை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட சரீனா குல்சும்,

“இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். இந்திய அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்தியக் குடியுரிமைக்கான மூன்று தசாப்த கால காத்திருப்புக்கு ஒரு முடிவு கிடைத்தது. “இறுதியாக., நான் ஒரு இந்தியன்” என்று 58 வயதான சரீனா குல்சும் நிம்மதி மற்றும் பெருமிதத்துடன் கூறினார்.

இலங்கையில் தனது வாழ்க்கையை நினைவுகூர்ந்த சரீனா குல்சும், “எனது கிராமம் மற்றும் எனது குழந்தைப் பருவம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது – மட்டுவாக்குளம் நிறைய தென்னை மரங்களைக் கொண்ட மணல் பிரதேசம், இங்கு பசுமை நிறைந்த பகுதி.

எனக்கு எப்போதும் இங்கு அடையாளப் பிரச்சினை இருந்தாலும், என் குழந்தைகள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை, ”என்று கூறினார்.

குல்சும் தனது மூத்த சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது தனது மூதாதையர் வீட்டிற்குச் சென்றார். குல்சுமின் சகோதரர்கள், தங்கைகள், உறவினர்கள் இன்னும் மட்டுவாக்குளம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இப்போது, இந்திய குடியுரிமையை பெற்ற நிலையில், ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகளுக்கும் விண்ணப்பிக்க உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து, தனது உம்ரா செய்ய வேண்டும் என்ற கனவையும் அடுத்து நிறைவேற்றிக்கொள்ள காத்திருப்பதாக குல்சும் கூறினார்.

Exit mobile version