உலகம்
காஸாவில் சோகம்., உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து ஐவர் பலி
காஸாவில் சோகம்., உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து ஐவர் பலி
காஸாவில் உதவிக்கு அனுப்பப்பட்ட பாராசூட் செயலிழந்து 5 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்.
காசா இஸ்ரேலுடனான போரால் பாலஸ்தீனத்தின் காஸாவின் நிலைமை பரிதாபகரமானதாக மாறியுள்ளது.
அங்குள்ள மக்கள் பசியால் கதறி அழுகிறார்கள். மனிதாபிமான உதவிக்காக காத்திருக்கின்றனர்.
இதனால் அங்குள்ள மக்களுக்கு உதவ பல நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வருகின்றன.
காஸாவில் விமானங்கள் மூலம் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
ஆனால, அண்மையில் காஸாவில் உதவி வழங்கும் போது சோகம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை, வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு பாராசூட் மூலம் உணவுப் பொதி அனுப்பப்பட்டது. அது உணவுக்காகக் காத்திருந்த மக்கள் மீது திறக்கப்படாமல் விழுந்தது.
இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவசர அறையின் தலைமை செவிலியர் முகமது அல்-ஷேக் தெரிவித்தார்.