இந்தியா

ஆதார் கார்டை தூக்கி எறிந்த சீமான்.., இது தான் எனது அடையாளமா என்று ஆவேசம்

Published

on

ஆதார் கார்டை தூக்கி எறிந்த சீமான்.., இது தான் எனது அடையாளமா என்று ஆவேசம்

தமிழ் மொழி அல்லாத அடையாள அட்டை என் அடையாளமா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வாக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 28 -ம் திகதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தை வாக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டம் 7 நாட்களை கடந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய சீமான், “தமிழன் தான் எனது அடையாளம். எனது முகம் சிதைந்து இருந்தால் என் முகத்தை அடையாளம் காண முடியாது. அது போல, என் மொழி சிதைந்து அழிந்தால் என் இனத்தை அடையாளம் காண முடியாது.

1800 ஆண்டுக்கு முன்பு ஏது கன்னட மொழி, 1600க்கு முன்புக்கு ஏது தெலுங்கு மொழி, 15ஆம் நூற்றாண்டுக்கு முன்பு மலையாள மொழி இல்லை. ஆனால், இன்று மூத்த மொழியான தமிழ் மொழியை தொலைக்க பார்க்கிறார்கள்” என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவரின் ஆதார் அட்டை நகலை வாங்கிய சீமான், “இந்தியா நமக்கு கொடுக்கும் அடையாளத்தை பாருங்கள். இதில் எனது பெயர் முதலில் ஹிந்தியில் உள்ளது, அடுத்து ஆங்கிலத்தில் உள்ளது.

என் தாய்மொழி இதில் இல்லை. இது தான் என் அடையாளமா?” என்று கேள்வி கேட்டு ஆதார் அட்டை நகலை தூக்கி எறிந்தார்.

Exit mobile version