உலகம்

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

Published

on

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

சென்னையில் 14 வயது சிறுவன் ஒருவன், செல்போன் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வசித்து வரும் தம்பதி சீனிவாச கிருஷ்ணகுமார் – சைனஜா. இவர்களது மகள் வைஷ்ணவி (20), மகன் ஸ்ரீராம் (14).

8ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீராம், சமீப காலமாக படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போன் கேமில் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாய் சைனஜா அவரை கண்டித்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் நேற்று இரவும் சிறுவன் கேம் விளையாடியுள்ளார்.

மீண்டும் சைனஜா மகனை கண்டித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் காரணமாக மன விரக்தியடைந்த ஸ்ரீராம், வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version