உலகம்
பிரித்தானியாவில் அகதி ஒருவரை காலால் மிதித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண் பொலிசார்
பிரித்தானியாவில் அகதி ஒருவரை காலால் மிதித்து தரதரவென இழுத்துச் சென்ற பெண் பொலிசார்
இங்கிலாந்தில், கட்டிடம் ஒன்றின் அருகில் படுத்திருந்த அகதி ஒருவரை, பெண் பொலிசார் ஒருவர் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இங்கிலாந்தில், கட்டிடம் ஒன்றின் அருகே அகதி ஒருவர் படுத்திருக்க, பெண் பொலிசார் ஒருவர், அவரை தரதரவென இழுத்துச் சென்றதுடன், அவரது வயிற்றிலும் மிதித்துள்ளார்.
பொலிசார் தாக்கியதில் காயமடைந்த அந்த 31 வயது நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரில் இரத்தம் கலந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சூடான் நாட்டவரான அந்த நபருக்கு பிரித்தானியாவில் தங்கியிருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சாலையோரமாகத் தூங்கும் தன் போன்றவர்களை கவுன்சில் அலுவலர்கள் வந்து எழுப்பிவிடுவது வழக்கம்தான் என்று கூறும் அவர், ஆனால், இதுவரை தனக்கு இப்படி ஒரு விடயம் நடந்ததில்லை என்கிறார்.
சம்பந்தப்பட்ட பொலிசார் நடந்துகொண்ட விதம் சரியானதல்ல என்று கூறியுள்ள பொலிஸ் அதிகாரிகள், அது குறித்து அந்த பெண் பொலிசாரிடம் தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட்டதாகவும், இனி அதுபோல நடக்கக்கூடாதென அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்வது என்பது குறித்து அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், வேறொரு நாட்டிலிருந்து அகதியாக வந்து, வீடில்லாமல் சாலையோரமாக படுத்துக்கிடந்த ஒருவரைத் தாக்கியதற்காக அந்த பெண் பொலிசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, பொலிஸ் அதிகாரிகளிடம் பதிலில்லை!