உலகம்

இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா?

Published

on

இந்தியர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா?

அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

வேலையின் காரணமாகவும், படிப்புக்காகவும் வெளிநாடுகளிள் இந்தியர்கள் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், அண்டை நாடுகளில் இந்தியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெரும்பாலான இந்தியர்கள் மொரிஷியஸ் (Mauritius), பிரிட்டன் (Britain), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) மற்றும் சிங்கப்பூர் (Singapore) உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர். இந்த நாடுகளில் சிலவற்றை நாம் ‘மினி இந்தியா’ என்றும் கூட சொல்லலாம்.

மொரிஷியஸ் (Mauritius)
மொரிஷியஸ் நாட்டில் 70% இந்தியர்கள் வாழ்கின்றனர். இந்தியர்கள் கலாச்சாரம் அங்கு அதிகமாகவே உள்ளது. இந்தியாவில் கிடைக்கும் உணவுகளை போல கிட்டத்தட்ட இந்த நாட்டிலும் கிடைக்கும்.

பிரிட்டன் (Britain)
உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற எண்ணற்ற இந்திய நிறுவனங்கள் பிரிட்டன் நாட்டில் காணப்படுகின்றன. இந்த கலாச்சார ஒற்றுமை உணர்வை உருவாக்குவது மட்டுமல்லாமல், இந்தியர்களை சொந்த நாட்டில் தங்குவது போல உணர வைக்கிறது. இந்த நாட்டில் 1.8 % இந்தியர்கள் வசிக்கின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் -ல் எங்கு சென்றாலும் நாம் இந்தியர்களை பார்க்கலாம். அங்குள்ள மக்கள் தொகையில் 42% பேர் இந்தியர்கள் தான்.

சவுதி அரேபியா (Saudi Arabia)
சவுதி அரேபியா நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 10% முதல் 13% வரை இந்தியர்கள் உள்ளனர்.

ஓமன் (Oman)
2023 -ம் ஆண்டில் ஓமனில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 9 லட்சமாகும். இந்த நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 20% இந்தியர்கள் உள்ளனர்.

சிங்கப்பூர் (Singapore)
2023 -ம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சிங்கப்பூர் ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படும் ஒரு இடம் உள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 1,78,410 பேர் NRI இந்தியர்கள், 15,10,645 பேர் இந்திய வம்சாவளி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர்களின் மக்கள் தொகை 16,89,055 பேர் ஆகும்.

 

Exit mobile version